ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
அஜீத் - ஷாலினி தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்த ஷாலினி, காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அமர்க்களம் படத்தில் அஜீத்துடன் நடித்த போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனையடுத்து 2000-ம் ஆண்டு அஜீத்-ஷாலினி திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2008ம் ஆண்டு குழந்தை அழகான பெண் குழந்தை பிறந்தது. அனோஷ்கா என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை மிகவும் சுட்டிப் பெண்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷாலினி மீண்டும் கர்ப்பமானார். சமீபத்தில் அஜீத்தின் என்னை அறிந்தால் படம் திரையிடப்பட்டபோது கர்ப்பிணியான ஷாலினி, தனது கணவரின் படத்தை முதல்நாள் முதல்ஷோவில் ரசிகர்களுடன் கண்டுகளித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாலினிக்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஷாலினியும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.
அஜீத்-ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு ஏராளமான திரைநட்சத்திரங்கள் இந்த தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைநட்சத்திரங்களை விட அஜீத்தின் ரசிகர்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக குட்டி தல வந்தாச்சு என்று #Kuttythala என்ற பெயரில் ஒரு ஹேஷ்டாக் உருவாக்கி புதிய டிரெண்ட் உருவாக்கி உள்ளனர்.